குறள் எண்: 0341 அதிகாரம்: துறவு.
குமரிநாடன் உரை:
எது எது உங்களுக்குத் துன்பம் தருகிறதோ அது அதில் இருந்து விலகி விடுவது அந்தந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கான வழியாகும்.
இயல்கணக்கு விளக்கம்:
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது பிழையான இலக்கியப்பாடு ஆகும்.
ஆசைப்படுவதே வளர்ச்சிக்கான அடிப்படை. அந்த வளர்ச்சிக்கு நீங்கள் அது கேட்கும் உழைப்பைக் கட்டாயம் தரவேண்டியிருக்கும். அந்த உழைப்பு உங்களுக்கு சிரமமாக இருந்தால் அந்த ஒன்றில் இருந்து மட்டும் விலகுவது போதுமானது.
கருத்துகள்
கருத்துரையிடுக