குறள் எண்: 992 அதிகாரம்: பண்புடைமை.

குமரிநாடன் உரை: உடைமைகளைக் கொண்டாடுகிறவனாக இருத்தலும், தன் முந்தைய ஏழு தலைமுறைகளில் கிடைத்திருந்த பாடாற்றல்கள் அடிப்படையிலேயே இயங்குதலுமே பண்புடைமை ஆகும். விளக்கம்: தன் முதல் உடைமையான தமிழைக் கொண்டாடுகிற பற்று, தன் பிள்ளைகளைப் பெற்றோரைக் கொண்டாடுகிற பாசம், தன் தலைவனைத் தலைவியைக் கொண்டாடுகிற காதல், தனக்கு இணக்கமானவர்களைக் கொண்டாடுகிற நட்பு, தன்னை முயக்கி இருக்கிற கடவுளை கொண்டாடுகிற அருள் என்று தன்னுடைய ஐந்து வகையான உடைமைகளைக் கொண்டாடுவதே அன்பு. அன்புடைமை என்பது உடைமைகளைக் கொண்டாடுகிறவனாக இருத்தல் என்பதாகும். ஆன்ற குடி பிறத்தல் என்பது அவன் அவனின் முந்தைய ஏழு தலைமுறைகளில் கிடைத்திருந்த பாடாற்றல்கள் அடிப்படையிலேயே இயங்குதல் என்பதாகும். ஆன்ற குடி பிறத்தல் என்பது பிறந்திருத்தல் என்கிற பிறப்படிப்படை ஏற்றதாழ்வு பேணுகிற நோக்கம் போல, பல ஆயிரம் ஆண்டுகளாக பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்கிற அயல்இயல்களிலேயே உலா வந்துவிட்ட காரணம் பற்றி பொருள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் அத்தனை உரையாசிரியர்களும்.